Vedalam Review By an ardent movie Fan

“அஜித்” என்ற ஒரு மனிதனை தவிர சொல்லி கொள்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை.

ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இருந்தும் கூட, தனி ஒருவனாக அஜித் படத்தை தாங்கி பிடித்து தூக்கி செல்வது அவர் மீது மரியாதையை வர வைக்கிறது…..

இருந்த போதும்…

ஒரு திரைப்படம் என்பது கூட்டு முயற்ச்சியே….
வீரம் சிவா வா இது… திரை கதையில் ஏன் இத்தனை சொதப்பல் ??
தம்பி அனிருத் உனக்கு என்னப்பா ஆச்சி… தனுஷ் தயாரிச்சா தான் நல்ல இசை கொடுப்பியா…???

படத்தை ரசிக்க வைக்கும் மூன்று பேர்.
1. தல
2. தம்பி ராமையா
3. லக்ஷ்மி மேனன்

படம் முழுக்க தல “ஆஷம்” “ஆஷம்”…. அந்த நடை, பார்வை, சிரிப்பு, முகபாவங்கள் மாறும் நேரம், தங்கை பாசம், அனைத்திலும் அஜித் அசத்தல்….

படம் முடிந்து வந்த பின்னரும் நெஞ்சில் நிற்கும் தல’யின் இரு தருணங்கள்.

1. பொண்ணுங்க முன்னால போகட்டும் சார், ஸ்கூலுக்கு போகட்டும், காலேஜுக்கு போகட்டும், வேலைக்கு போகட்டும் விடுங்க சார்.

உச்சகட்ட உண்மை:

“என்னைய எத்தனையோ பேரு முதுகுல குத்திட்டு போயிருக்காங்க” – சத்தியமான உண்மை தல…

இந்த படத்திற்கும் அது பொருந்தும் !!!

NO COMMENTS

LEAVE A REPLY